டில்ஷானின் தலையை பதம் பார்த்த பவுன்சர்! கரீபியன் லீக் போட்டியில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
கரீபியன் லீக் போட்டியில் போட்டியில் பவுன்சர் பந்து இலங்கை வீரர் டில்ஷானின் ஹெல்மெட்டை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 6வது லீக் ஆட்டத்தில...

6வது லீக் ஆட்டத்தில் லூசிய சூக்ஸ்- குயான அமாசன் வாரியஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய லூசிய சூக்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய அமாசன் வாரியஸ் அணிக்கு சிம்மோன்ஸ், டில்ஷான் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினர். இருவரும் அதிரடி காட்டினர்.
இந்நிலையில் 3.3 ஓவரில் ரோச் வீசிய ஒரு பவுன்சர் பந்து டில்ஷானின் ஹெல்மெட்டை தாக்கியது. இதில் வலது கண்ணிற்கு சற்று மேல் பகுதியில் காயம் ஏற்பட டில்ஷான் களத்தை விட்டு வெளியேறினார். இவர் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
இவரைத் தொடர்ந்து வந்தவர்களும் அதிரடி காட்டினர். இருப்பினும் அந்த அணியால் 18 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் லூசிய சூக்ஸ் அணி 2 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றது.