வேன் விபத்தில் 13 பேருக்கு காயம்
பதுளையில் உள்ள ஹாங்கிலி எல்ல பகுதியில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தி...
http://kandyskynews.blogspot.com/2015/03/13_27.html

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 8 பேர் ஆண்கள் என்றும் ஏனைய 5 பேரும் பெண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து இவர்கள் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கவலைக்கிடமான நிலையில் இருந்த மூன்று பெண்கள் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தோர் குருநாகல் பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


Sri Lanka Rupee Exchange Rate