மாலக்க சில்வா இரவு விடுதிக்கு செல்ல நீதிமன்றம் அனுமதி மறுப்பு
இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்குமாறு முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்லாவின் மகன் மாலக்க சில்வா விடுத்த வேண்டுகோளை கொழு...


பிரித்தானியப் பிரஜைகள் இருவரைத் தாக்கியதாக மாலக்க சில்வா குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், அவர் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்ல தடை விதித்திருந்தது.
மக்கள் நடமாடும் பொது இடங்களில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாலக்க நடக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இந்த தடைகள் தனது மனித உரிமைகளை மீறுவதாக புகார் தெரிவித்து மாலக்க சில்வா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை ஆராய்ந்த நீதிபதி, மாலக்க சில்வாவின் வேண்டுகோளை நிராகரிப்பதாகவும், சமூக ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு கருதி இவ்வகையான தடைகளைப் பிறப்பிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் முடிவு தெரிவித்துள்ளார்.