கனடிய நாடாளுமன்றத்தில் இருந்து விலகும் 50 உறுப்பினர்கள்
கனடிய நாடாளுமன்றத்தில் இருந்து விலகப்போவதாக 50 உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இவர்களில் பாதிபேர் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்...


இவர்களில் பாதிபேர் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்களாவர்.
குடும்பத்தினருடன் வாழ்க்கையைக் கழிப்பதற்காக அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
வேறு பலர் வேறு பணி ஒன்றைத் தேடிக் கொள்ளப்போவதாகவும், இன்னும் சிலர் பூரண ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
பண்பாட்டுத்துறை அமைச்சரான ஷெலி குலோவரும் (Shelly Glover) அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.
ஏழு வருடங்களாக சமஷ்டி அரசியலில் இருந்த தான் ஒரே ஒரு மனக்குறையுடன் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.
தனியார் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே தனக்குள்ள ஒரே ஒரு குறை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு தெரிவானதும் நாடாளுமன்றச் செயலாளர் பதவி தன்னை நாடி வந்து விட்டது என்றும் நாடாளுமன்றச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தனியார் மசோதாக்களை சமர்ப்பிக்க முடியாது எனவும் ஷெலி குலோவர் தெரிவித்துள்ளார்.