ரம்ஜான் நோன்பு இருந்த போது நிகழ்ந்த விபரீதம்: பரிதாபமாக உயிரிழந்த அகதி
சுவிட்சர்லாந்து நாட்டில் ரம்ஜான் நோன்பு இருந்த அகதி ஒருவர், ஜேனிவா மண்டல ஏரியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_199.html

மொரோக்கோ நாட்டை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர், பிரான்ஸில் குடியேறி வசித்து வந்துள்ளார்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அவர் கடந்த யூன் 18 முதல் ரம்ஜான் நோன்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுவிஸிற்கு சுற்றுலா வந்த அவர் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் Rolle பகுதியில் உள்ள ஜேனிவா ஏரிக்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கிய அவர் கரையிலிருந்து சுமார் 15 மீற்றர் தொலைவு வரை அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த காட்சியை கண்ட வாலிபர்கள் சிலர், ஏரியில் குதித்து அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், முதலுதவி சிகிச்சை பலனளிக்காததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், நோன்பின் போது உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளதால், ஏரியில் விழுந்ததும் உடல் சோர்வின் காரணமாக அவரால் கரைக்கு திரும்ப முடியவில்லை என்பது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜேனிவா ஏரி பகுதியில் வெப்பத்தின் அளவு 28 டிகிரி செல்சியசாக இருந்ததால், நீர்நிலைகள் அதிகமுள்ள பகுதிகளுக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும், எதிர்வரும் வாரங்களில் சுவிட்சர்லாந்து முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுவிஸ் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.