சிலரின் தனிப்­பட்ட நோக்­கங்­க­ளுக்­கா­க மஹிந்த தேர்­தலில் போட்டியிடக்கூடாது! பசில் எச்சரிக்கை

நாட்டின் நிலை­மை­களை ஆராய்ந்து மிகவும் கவ­னத்­து­டனே மஹிந்த தேர்­தலில் கள­மி­றங்க வேண்டும் என அவரின் தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ...

நாட்டின் நிலை­மை­களை ஆராய்ந்து மிகவும் கவ­னத்­து­டனே மஹிந்த தேர்­தலில் கள­மி­றங்க வேண்டும் என அவரின் தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாரு­டைய தனிப்­பட்ட நோக்­கங்­க­ளுக்­கா­கவும் மஹிந்த தேர்­தலில் கள­மி­றங்­கினால் அது அவ­ரையே பாதிக்கும். யார் என்ன சொன்­னாலும் மக்கள் இன்றும் மஹிந்­தவின் பக்­கமே உள்­ளனர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ஷ பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்கப் பட­வேண்டும் என்ற கருத்து மஹிந்த ஆத­ரவுக் கூட்­ட­ணியால் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலை­மையில் அவர் கள­மி­றங்கும் சாத்­தியம் உள்­ளதா? என்­பது தொடர்பில் வின­விய போதே முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை மீண்டும் அர­சி­ய­லுக்கு கொண்­டு­வரும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதை நான் அறிவேன். மக்­களும் அவரை மீண்டும் அர­சி­ய­லுக்கு அழைக்­கின்­றனர் என்­பதும் எமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மஹிந்த மீண்டும் அர­சி­ய­லுக்கு வரு­வது தொடர்பில் என்னால் ஒரு நிலைப்­பாட்டில் கருத்து தெரி­விக்க முடி­யாது.

மக்­க­ளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் அந்த வேலைத்­திட்­டத்தில் மஹிந்த எனக்கும் அழைப்பு விடுத்தால் நான் அந்த காரி­யத்தில் என்­னையும் இணைத்­துக்­கொள்வேன்.

ஆனால் என்­னைப்­பொ­றுத்த வரை­யிலும் மஹிந்த மிகவும் கவ­னத்­துடன் நிலை­மை­களை ஆராய்ந்து களத்தில் இறங்க வேண்டும். யாரு­டைய தனிப்­பட்ட நோக்­கமும் இதன் பின்­ன­ணியில் இருக்­கு­மானால் அது மஹிந்தவையே பாதிக்கும் என்­பதை அவர் மனதில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

மக்கள் எப்­போதும் அவர் பக்கம் உள்­ளனர் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அதே போல் தீர்­மா­னங்­களும் மக்­களை பலப்­ப­டுத்தும் வகையில் அமைய வேண்டும்.

இன்று நடை­மு­றையில் இருக்கும் அர­சாங்கம் மிகவும் நகைப்­புக்­கு­ரி­ய­தாக மாறி­யுள்­ளது.

பெரும்­பான்மை ஆத­ரவு எதிர்க்­கட்சி பக்கம் இருக்­கையில் பெரும்­பான்மை ஆத­ரவு இல்­லாத அர­சாங்கம் ஆட்சி நடத்­து­கின்­றது. ஒரு சிலரின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்­கத்தில் முழு நாட்­டையும் பாதா­ளத்தில் தள்ளி­யுள்­ளனர். உலகில் எந்த நாட்­டிலும் இவ்­வா­றா­ன­தொரு ஆட்சி நடக்­க­வில்லை.

ஒரு ஆட்சி எவ்­வாறு அமையக் கூடாது என்­ப­தற்கு உலக நாடுகள் அனைத்­துக்கும் இலங்கை நல்­ல­தொரு உதா­ர­ண­மாகும்.

எமக்கு தோல்வி என்­பது புதி­தல்ல. ஆனால் இன்று நாட்டில் பல­மான எதிர்க்­கட்சி இல்­லாமல் போயுள்­ள­மையே எமக்கு மிகப்­பெ­ரிய தோல்­வி­யாக மாறி­யுள்­ளது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் 62 இலட்சம் மக்கள் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர் என்­பது ஏற்­றுக்­கொள்ளக் கூடிய விட­யமே. ஆனால் 58 இலட்சம் மக்கள் இந்த அர­சாங்­கத்தை எதிர்த்­துள்­ளனர். அந்த மக்கள் இன்று அனா­த­ர­வா­கி­விட்­டனர். அந்த மக்­களை இந்த அர­சாங்கம் பழி­வாங்கி வரு­கின்­றது.

யாரை ஆத­ரிக்க வேண்டும், யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பது மக்­களின் தனிப்­பட்ட விருப்­பாகும். ஜனா­தி­பதித் தேர்­தலில் 58 இலஞ்சம் மக்கள் மஹிந்­தவை ஆத­ரித்­தமை மக்­களின் தவறு அல்ல. அது மக்­களின் விருப்­ப­மாகும். ஆகவே அதை இந்த அர­சாங்கம் பழி­வாங்கும் நோக்­கத்தில் கையாளக் கூடாது.

அவ்­வாறு செயற்­ப­டு­வது மீண்டும் இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும். ஆட்சி மாறலாம் தலைமைத்துவம் கைமாறலாம். ஆனால் வென்றெடுத்த நாட்டின் விடுதலை மீண்டும் சிதைவடைந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பசில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலின் பின்புலம் என்ன? உண்மைகள்அம்பலம்!!!

இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு எச்ச...

சவூதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை வாலிபர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 28 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் வாக...

கைவிரலை உடைக்க பார்த்தார், தாக்கவில்லை பிடித்து தள்ளினேன் : மஹிந்த

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் ட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item