சவூதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை வாலிபர் பலி
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 28 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே இந்த விப...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_846.html

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
28 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் வாகனம் மற்றொரு மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அவர் தான் பயணித்த வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞர் சவூதியின் ரியாத் நகரில் சந்தைப்படுத்தல் தொழில் புரியக் கூடிய ஒருவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் மற்ற வாகனத்தை செலுத்திய சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் அவரும் ஆசிய நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate