மனித உரிமை மீறல்களுக்குப் பெயர்போன குவாண்டனாமோ சிறைச்சாலையை மூட தீர்மானம்
உலகிலேயே மிக மோசமாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இடமாகக் கருதப்படும் குவாண்டனாமோ சிறைச்சாலையை மூடுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அம...


உலகிலேயே மிக மோசமாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இடமாகக் கருதப்படும் குவாண்டனாமோ சிறைச்சாலையை மூடுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் அமெரிக்கா மும்முரமாக இறங்கியது.
பிடிபட்ட தீவிரவாதிகளை கியூபா அருகேயுள்ள குவாண்டனாமோ வளைகுடா சிறைச்சாலையில் அடைத்தது.
அங்கு உலகிலேயே மிக மோசமான சிறைக் கொடூரங்களை அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அரங்கேற்றியதாக உலகளவில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
குவாண்டனாமோ சிறைச்சாலைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. 2009ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற போது குவாண்டனாமோ சிறைச்சாலைய இழுத்து மூடுவேன் என சூளுரைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வந்தனர்.
தற்போது இதனை நிரந்தரமாக மூடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.