போதைப்பொருள் கடத்தல்: பிரான்ஸ் நபரை தூக்கில் போடும் இந்தோனேஷியா

மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பிரான்ஸ் நாட்டவரின் இறுதி கோரிக்கையை இந்தோனேஷிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ...


france_indonesia_002
மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பிரான்ஸ் நாட்டவரின் இறுதி கோரிக்கையை இந்தோனேஷிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட 9 வெளிநாடுகளை சேர்ந்த 10 நபர்களை போதைப்பொருள் கடத்தியதாக கடந்த 2005ம் ஆண்டு இந்தோனேஷிய பொலிசார் கைது செய்தனர்.
போதைப்பொருள் கடத்தியது உறுதியானதால், 10 கைதிகளுக்கும் கடந்த 2008ம் ஆண்டு மரண தண்டனை விதித்து இந்தோனேஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பிற்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது, இதனை தொடர்ந்து, பிரான்ஸ் குடிமகனின் மரண தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக இந்தோனேஷிய அரசு அறிவித்திருந்தது.
இதற்கிடையில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு, பிரான்ஸ் குற்றவாளி செர்ஜே சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவை ஜனாதிபதி நிராகரித்துவிட்டதையடுத்து, தனது மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் செர்ஜே மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜனாதிபதியின் முடிவை ரத்து செய்ய முடியாது என நேற்று(21 ஆம் திகதி) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து விரைவில் அவரது மரணதண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேஷியிவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 2 நபர்கள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related

மேலும் ஒரு பழங்கால நகரை அழிக்கிறது ஐஎஸ்

ஐஎஸ் அழிக்கத் துவங்கியிருக்கும் ஹத்ரா நகரம், 2,000 ஆண்டுகள் பழமையானது. பாக்தாத் நகருக்கு வடமேற்கில் 290 கி.மீ. தூரத்தில் மோசுல் நகருக்கு தென்மேற்கில் 110 கி.மீ. தூரத்திலும் ஹத்ரா அமைந்திருக்கிறது....

செவ்வாய் கிரகத்தில் ஆர்க்டிக் கடலை விட பெரிய கடல்: நாசா கண்டுபிடிப்பு

செவ்வாயில் ஆய்வு நடத்தி வரும் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், அந்த கிரகத்தில் மிகப்பெரிய கடல்  இருந்திருப்பதற்கான அடையாளங்களை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் சுமார் 40 லட்ச...

  உலகம் சிரிய ராணுவ தாக்குதலில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாத தலைவன் பலி

சிரியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற நுஸ்ரா முன்னணி என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக திகழ்ந்தவர் அபு ஹூமாம் அல் சமி. இவர் அங்கு இத்லிப் மாகாணத்தில் நேற்று ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.இதுகு...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item