உலகம் சிரிய ராணுவ தாக்குதலில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாத தலைவன் பலி
சிரியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற நுஸ்ரா முன்னணி என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக திகழ்ந்தவர் அபு ஹூமாம் அல் சமி. இவர் அங்கு இத்லிப் ம...


இவர் அங்கு இத்லிப் மாகாணத்தில் நேற்று ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து உளவுத்தகவல் அறிந்த சிரிய ராணுவம், அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தது. இந்த தாக்குதலில் சிக்கி, அபு ஹூமாம் அல் சமி உயிரிழந்தார்.
இது குறித்து சிரிய அரசின் செய்தி நிறுவனம் ‘சானா’, “அபு ஹூமாம் அல் சமி, தனது இயக்கத்தின் தலைவர்களுடன், இத்லிப் மாகாணத்தில் உள்ள ஹொபாய்ட் என்ற கிராமத்தில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, அவர்களை குறி வைத்து சிரிய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அபு ஹூமாம் அல் சமியும், பிற தலைவர்களும் பலியாகி விட்டனர்” என்று கூறியது.
முதலில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் அபு ஹூமாம் அல் சமி சிக்கி பலியாகி விட்டதாக தீவிரவாத இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்பதால் அவர்கள் சிரிய ராணுவத்தின் தாக்குதலில்தான் பலியாகி இருக்கின்றனர் என்பது உறுதியாகிறது என ஒரு தகவல் கூறுகிறது