விசேட கல்வி வலயங்களாக மாற்றப்பட்டது கிளிநொச்சி, முல்லை மாவட்டங்கள்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இ...


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளினது உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிவில் பாதுகாப்பு பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக கல்வி கற்பித்து வரும் ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் நடத்தப்பட்டு நேர்முகப் பரீட்சையின் பின்னர் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுதொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.