கழுத்து நிற்காமல் அவதிப்படும் சிறுவன்..இதற்கு இவன் இறந்தே விடலாம்: கதறும் பெற்றோர் (வீடியோ இணைப்பு)
மத்தியப்பிரதேசத்தில் பிறவியிலேயே முதுகெலும்பு பாதிப்புடன் பிறந்த சிறுவன் ஒருவனின் தலை, 180 டிகிரி கோணத்தில் தொங்கிய நிலையிலேயே காணப்படுகிற...


முகேஷ் அஹிர்வார்-சுமித்ரா அஹிர்வார் கூலித் தொழிலாளி தம்பதியரின் 12 வயது மகன் மஹேந்திரா அஹிர்வாருக்கு பிறவியிலேயே முதுகெலும்பு பாதிப்பு இருந்துள்ளது.
இதனால் நிற்கவோ, நடக்கவோ முடியாமல் தொங்கிய தலையுடன் மெதுவாக தவழ்ந்து மட்டுமே செல்லும் இவனது நிலையை மாற்ற மஹேந்திராவின் பெற்றோர் சுமார் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் 2 வார காலம் பல பரிசோதனைகள் செய்து பார்த்தும், மஹேந்திராவுக்கு என்ன சிகிச்சை அளித்து, எப்படி குணப்படுத்துவது? என்பது தெரியாமல் மருத்துவர்கள் குழம்பியுள்ளனர்.
உண்பது, குளிப்பது என அனைத்து அத்தியாவசிய விடயங்களை செய்வதற்கும் அவன் தனது தாயார் சுமித்ராவின் உதவியை நாட வேண்டியுள்ளது.
வயதாக ஆக மஹேந்திராவின் எடையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் அவனை தூக்கிக்கொண்டு திரிய முடியாத நிலையில் இருக்கும் சுமித்ரா மிகவும் வேதனையில் உள்ளார்.
மேலும், மருத்துவர்களால் அவனை குணப்படுத்த முடியவில்லை என்றால், கடவுள் அவனை அழைத்துக்கொள்ளட்டும் என்றும் எங்கள் கண் எதிரில் அவன் அவதிப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க இயலவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

