மகிந்தவா - மைத்திரியா சர்வாதிகாரி? - விமல் வீரவன்ச கேள்வி.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருக்கும் இன்றைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா அல்லது ம...

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருக்கும் இன்றைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா அல்லது முந்தைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ.

நாராஹேன்பிட்டிய அபயராமயவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.நாடு அரசியல் ரீதியாக மிகவும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர், பிரதமரையும் நியமித்து,எதிர்க்கட்சித் தலைவரையும் தெரிவு செய்து கொண்டு மூன்று அதிகாரங்களையும் தம்வசம் வைத்துள்ள அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் காணப்படுகிறது.

முழு நாடாளுமன்றமும் தேசிய அரசாங்கமாக ஒன்றிணைந்திருக்கும் அனுபவங்களை உலக நாடுகள் கொண்டுள்ளன. ஆனால், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை போன்ற அரசாங்க அனுபவங்களை உலக நாடுகள் கொண்டிருக்காது. சிங்கப்பூர் போன்ற தேசிய அரசாங்கம் ஆட்சி செய்யும் நாடுகளில் பெயரளவிலாவது தனியான எதிர்க்கட்சித் தலைவர் பிரதிநிதித்துவம் செய்கிறார். இலங்கையின் மூன்று அதிகார கேந்திரங்களையும் ஒரு இடத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால், தற்போதைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா அல்லது முந்தைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா என்ற கேள்வி எழுகிறது.

நல்லாட்சி ஐயாமார் சர்வாதிகார அரசாங்கம் என்று வர்ணிக்கும் கடந்த அரசாங்கம் அந்த மலையும் என்னுடையது, இந்த மலையும் என்னுடையது என்று அனைத்தை பிடித்து வைத்திருக்கவில்லை. கடந்த அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 150க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. தேவையிருந்தால், தனியான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இலகுவாக பறித்திருக்கலாம்.

எனினும் கடந்த அரசாங்கம் அப்படி செய்யவில்லை. அப்படி செய்யாத அரசாங்கத்தை இந்த நல்லாட்சி துரைமார் சர்வாதிகார அரசாங்கம் என்கின்றனர். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளை கைப்பற்றியுள்ள இந்த அரசாங்கத்தை எப்படியான சர்வாதிகார அரசாங்கம் எனக் கூறுவது எனவும் விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

Related

இலங்கை 7298900633671242471

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item