மஹிந்த அபேகோனுக்கு இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ள மத்திய மாகாண சபை தலைவர் மஹிந்த அபேகோனுக்கு இரண்டரை வருடங்கள் சிறைத்தண்...


கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர முன்னிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஹேவாஹெட்ட தொகுதியின் கலஹா பிரதேசத்தில் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டதாக தெரிவித்து மஹிந்த அபேகோன் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவர்களில் 11 பேர் இதன் முன்னர் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் போது 3 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மத்திய மாகாண சபைத் தலைவர் மஹிந்த அபேகோன் குற்றவாளியாக நிரூபனமாகியுள்ளது.
அதற்கமைய முதலாவது குற்றச்சாட்டிற்கு 6 மாதங்களும், இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றச்சாட்டிற்கு தலா ஒரு வருடமுமாக மொத்தம் இரண்டரை வருடங்கள் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.