13வயது சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட இருவர் கைது
இந்தியாவின் பாண்டிசேரி மாநிலத்திற்கு அருகில் கீழைபுதுபோட்டை அகதி முகாமில் வசித்து வரும் 13வயது சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்பட...


உள்ளூர் ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 13 வயதான சிறுமியை அனிச்சிகுப்பம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஆர். பாலா, 22 வயதான கே. பிரபு ஆகியோர் கசூரினா கிரேவ் என்ற .இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், கோட்டகுப்பம் பொஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த பாலா என்பவர் தற்போது அனிச்சிகுப்பம் பிரதேசத்தில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.