ஐந்து ஆண்டுகளாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மதபோதகர்!
தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_209.html
இதனையடுத்து குறித்த யுவதி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி தனது தாய், தந்தையை இழந்த நிலையில் வேறு ஒருவரின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்து வந்த நிலையில் அவர் தொடர்ந்து கற்பதற்காக கிறிஸ்தவ சபை ஒன்றின் பராமரிப்பு நிலையத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு அவரது 11 ஆவது வயதில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் மதபோதகர், பராமரிப்பு நிலையில் இருந்து குறித்த யுவதியை பொறுப்பெடுத்து தனது வீட்டில் வளர்த்து வந்தார் என்றும், மதப்போதகரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த யுவதியை மிரட்டி (அப்போது 15 வயது) பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனவும், ஐந்து வருடங்களாக இவ்வாறு தொடர்ச்சியாகத் தான் துன்புறுத்தப்பட்டுவந்தார் எனவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Sri Lanka Rupee Exchange Rate