வன்னி எம்பி.களுடன் ரணில் சந்திப்பு! - கூட்டத்தைப் புறக்கணித்தார் சிறிதரன்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மூன்று-நாள் வடக்கு பயணத்தின் இறுதிநாளான நேற்று கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நா...


எனினும், பிரதமருடனான சந்திப்பில் தானும் மற்றுமொரு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் மற்றும் நலன் விரும்பிகள் சிலரும் கலந்து கொண்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கிளிநொச்சி உட்பட வன்னி மாவட்டங்களின் நிலைமைகள், மக்களின் வாழ்க்கை நிலைமைகள் என்பவை குறித்து பிரதமர் தங்களிடம் கேட்டறிந்து கொண்டதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மக்களின் வீடில்லாப் பிரச்சனை, வாழ்வாதாரப் பிரச்சினைகள், இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிப் பிரச்சனைகள், மீனவர் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாக அடைக்கலநாதன் கூறினார்.
