தாருஸ் ஷாபி மஸ்ஜிதுக்கு எதிராக மீண்டும் முறைப்பாடு ..!!
தெஹிவளை, கடவத்தை வீதியிலுள்ள தாருஸ் ஷாபி பள்ளிவாசலுக்கு தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் நோக்கில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்...


இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனுடன் பள்ளிவாசல் நிர்வாகிகள் சமூகமளித்து வாக்குமூலம் வழங்கினர். அத்துடன் சமய விவகாரங்களுக்கான பொலிஸாரினை குறித்த பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு சுயாதீன மேற்பார்வையினை மேற்கொள்ளுமாறும் பள்ளிவாசல் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த பள்ளிவாசலுக்கு எதிராக கங்கொடவில நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போது, பள்ளிவாசலுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கப் பெற்றமையும் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டமையும் சமய விவகாரங்களுக்கான பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பள்ளிவாசல்,அ யலில் வாழ்வோருக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி கொஹுவல பொலிஸார் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி கங்கொடவில நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து குறித்த பள்ளிவாசலின் தொழுகை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறு கங்கொடவில மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
எனினும் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடவடிக்கையினை தொடர முடியும் என கங்கொடவில மேலதிக நீதவான் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மார்ச் 3ஆம் தீர்ப்பு வழங்கியிருந்தார். இதனையடுத்து குறித்த பள்ளிவாசலில் எந்தவித பிரச்சினையுமின்றி தொழுகை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் குறித்த பள்ளிவாசல் தொடர்பில் கங்கொடவில மேலதிக நீதவான் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பிலான விசாரணைகள் கடந்த நவம்பர் 14ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது வாபஸ் பெற்றப்பட்டது. இந்த நிலையிலேயே குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக மீண்டுமொரு முறைப்பாடு சமய விவகாரங்களுக்கான பொலிஸ் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த பொய் முறைப்பாட்டுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஆர்.ஆர்.டி. அமைப்பின் ஏற்பாட்டாளரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.