முஸ்லிம் மீள் குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் றிஷாத் மீது முறைப்பாடு
அபூ அஸ்ஜத்: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் செயற்பட்டுவரும் இனவாத சக்தியான பொது பலசேனா.சி்ங்கள ஜாதிக பெரமுன என...


அபூ அஸ்ஜத்: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் செயற்பட்டுவரும் இனவாத சக்தியான பொது பலசேனா.சி்ங்கள ஜாதிக பெரமுன என்னும் பெயரில் அமைப்பொன்றினை உருவாக்கி மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதுடன்,அந்த அமைப்புடன் தொடர்பபட்ட ஒருவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் வில்பத்து சரணாலயத்தினை கையகப்படுத்தி அதில் வெளிநாட்டவர்களை குடியமர்த்தியுள்ளதாக இலஞ.ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அண்மையக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கடும் இனப்போக்கு கொண்டு செயற்படும் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பினர் தற்போது இனவாத சக்திகளுடன் கூட்டுசேர்ந்து புதியதொரு பெயரில் அந்த வேளையினை மீண்டும் செய்ய ஆரம்பித்துள்ளதை காணமுடிகின்றது.
இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை இந்த பொதுபலசேன தடுக்கும் வகையில் செயற்பட்டுவந்த நிலையில்.மேலும் பல்வேறு அமைப்புக்களின் பெயர்களில் செயற்பட ஆரம்பித்துள்ளமையினை தற்போது மேற்கொண்டுள்ள முறைப்பாட்டினை செய்துள்ளதை காணமுடிகின்றது