பசில் ராஜபக்ச நாட்டுக்குள் பிரவேசித்தவுடன் கைது செய்ய உத்தரவு
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டுக்குள் பிரவேசித்த உடன் கைது செய்யப்படவுள்ளார். பசில் ராஜபக்ச இலங்கையை அடைந்தவ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_797.html

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டுக்குள் பிரவேசித்த உடன் கைது செய்யப்படவுள்ளார். பசில் ராஜபக்ச இலங்கையை அடைந்தவுடன் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று உத்தரவிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் நுழைந்தவுடன் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை வலுவற்றதாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதிக் குற்றவியல் பிரிவிற்கு தம்மை கைது செய்ய வேண்டாம் என உத்தரவிடுமாறு சட்டத்தரணிகள் ஊடாக பசில் கோரியுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
பசில் ராபஜக்ச சார்பில் யூ.ஆர்.டி. சில்வா இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.முன்னர் விடுக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.-
20 ஆம் திகதிக்குப் பின்னர் பசில் ராஜபக்ஸ நாட்டிற்கு வருகை
நிதி மோசடி விசாரணைப் பிரிவு, கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்து தகவல்களை வழங்குவதாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தமது சட்டத்தரணிகள் ஊடாக இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்குப் பின்னர் பசில் ராஜபக்ஸ நாட்டிற்கு வருகை தந்து தகவல்களை வழங்குவார் என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஸ வெளிநாடு சென்றுள்ளமையினாலும், பாராளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக் கொண்டுள்ளமையினாலும், நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவை அறிந்து கொண்டு இதனை அறிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate