கோத்தபாய சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்!- நிதியமைச்சர் ரவி
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் சொத்துக்களை முன்வைக்குமாறு தான் சவால் விடுத்ததாகவும், ஆனால் தற்போதுவரை இது குறித்து...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_196.html

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் சொத்துக்களை முன்வைக்குமாறு தான் சவால் விடுத்ததாகவும், ஆனால் தற்போதுவரை இது குறித்து எந்தவொரு பதிலும் இல்லை எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் நடந்தவற்றை தற்போதுள்ள எதிர்க்கட்சிகளுக்கு நடைபெற இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் ஜனநாயக மீறல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ரவி கருணாநாயக்க இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த 61 நாட்களில் நாட்டிலுள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழத் தேவையான வழி புதிய அரசால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் சொத்துக்களை முன்வைக்குமாறு தான் சவால் விடுத்ததாகவும், ஆனால் இன்றுவரை இவ்விடயம் குறித்து எந்தவொரு பதிலுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் - ரவி கருணாநாயக்க
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கோத்தபாயவை சொத்து விபரங்களை வெளியிடுமாறு சவால் விட்டிருந்தேன். எனினும், இந்த சவாலுக்கு இதுவரையில் அவர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் எதிர்க்கட்சி எதிர்நோக்கிய பிரச்சினைகள் இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சிக்கு ஏற்பட வாய்ப்பு இருக்காது.
61 நாட்களில் மக்களினால் சந்தோசமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 7500 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
நாட்டில் ஜனநாயக விரோத செயற்பாடுகள் இடம்பெற இடமளிக்கப் போவதில்லை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate