ஜனாதிபதி- பிரதமரை பிளவுபடுத்த ஊடகம் சூழ்ச்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பிளவுபடுத்தும் ஊடக சூழ்ச்சித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவத...



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பிளவுபடுத்தும் ஊடக சூழ்ச்சித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சூழ்ச்சி திட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விகரமசிங்க இடையே விரிசலை ஏற்டுத்தி தேசிய அரசாங்கத்தை கவிழ்த்தி நல்லாட்சியை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியென தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தையை ராஜபக்ச ஆதரவு ஊடகவியலாளர்கள் அண்மையில் நடத்தியுள்ளார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஆற்றும் உரைகளை பத்திரிகைகளில் முன்னுரிமை அளித்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்கு பத்திரிகையில் முன்னுரிமை அளிப்பட்டுள்ளது.
மூன்று பிரதான சிங்கள தேசிய பத்திரிகைகள் ஊடாக அமைச்சர்களை நேர்காணல் எடுத்து அதில் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான விமர்சனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமரை விமர்சிக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் தேசிய தலைவர்களாக நினைத்து அவர்களுக்கு பத்திரிகையில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

இலங்கை 1565970073082201846

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item