நாடாளுமன்றம் சென்ற மோடி: வெளியேறிய விமல்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற சந்தர்பத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் த...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_707.html
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற சந்தர்பத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தை விட்டு வெளியே சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக விமலிடம் வினவிய போது அதற்கு பதிலளித்த விமல், தற்பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்து 13ஆம் அரசியல் அமைப்புக்கு அப்பால் செல்லுங்கள் என தெரிவிப்பாரானால் அவ்வாறானதொரு அரசியல் தலைவரின் போதனைகளை செவி மடுக்கவேண்டிய அவசியம் எனகில்லை, அதனாலேயே நாடாளுமன்றத்தை விட்டு வெளியே சென்றேன்.
இவ்வாறு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு அரச தலைவர் ஒருவருக்கு எவ்வித உரிமையும் கிடையாதென விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.



Sri Lanka Rupee Exchange Rate