இஸ்லாத்திற்கு எதிராக எழுதிவந்த நாத்திக எழுத்தாளர் வெட்டிக் கொலை
எழுத்தாளரும், பிளாகருமான(blogger) நாத்திகவாதி அவ்ஜித் ராய் வங்கதேசத்தில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தை ச...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_804.html

எழுத்தாளரும், பிளாகருமான(blogger) நாத்திகவாதி அவ்ஜித் ராய் வங்கதேசத்தில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்தவர் அவ்ஜித் ராய். எழுத்தாளர், பிளாகர். அமெரிக்காவில் வசித்து வந்த அவர் புத்தக கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்ள தனது மனைவி ரபிதாவுடன் வங்கதேசம் வந்துள்ளார். வியாழக்கிழமை இரவு அவர்கள் இருவரும் புத்தக கண்காட்சியில் இருந்து ரிக்ஷா மூலம் வீடு திரும்புகையில் மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்தனர்.
மர்ம நபர்கள் அவ்ஜித் ராய் மற்றும் அவரது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அவ்ஜித் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்ஜித்துக்கு பலகாலமாக கொலை மிரட்டல் விடுத்து வந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்பினர் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அவ்ஜித் ராய் நாத்திகவாதியான அவ்ஜித் ராய் முக்தோ மோனா என்ற பிளாக்கில் எழுதி வந்தார். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் மதச்சார்பின்மை பற்றி எழுதி வந்தார். அவர் எழுதிய பல புத்தகங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதனால் அவருக்கும், அவரது புத்தகங்களை வெளியிடுபவர்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. வங்கதேசத்தில் உள்ள ரோகமாரி.காம் என்ற கடையில் அவ்ஜித் ராயின் புத்தகங்களை விற்கக் கூடாது என்று ஆயுததாரிகள் கடந்த ஆண்டு மிரட்டல் விடுத்தனர்.
ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த பராபி சபியுர் தான் ராய்க்கும், புத்தக கடைக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். வங்கதேசத்தில் பிறந்த என்ஜினியரான அவ்ஜித் ராய் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் தத்துவம், அறிவியல் சிந்தனை, மனித உரிமைகள் பற்றி பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.
ரபிதா இந்து மதத்தைச் சேர்ந்த ராயை திருமணம் செய்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக அவர் எழுதுவதை ஆதரிப்பதாக ஆயுததாரிகள் அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். மிரட்டல் ஏன்? ராய் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுவதாக ஆயுததாரிகள் அவர் மீது குற்றம்சாட்டினர்.
ராய் நாத்திகத்தை ஊக்குவிப்பதுடன், நபிகள் நாயகத்தை அவதமிப்பதாக தீவிரவாதிகள் குற்றம் சாட்டி வந்தனர். ராயின் புத்தகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் தெரிவித்தனர். ராயின் எழுத்துக்கள் ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு பிடிக்கவில்லை


Sri Lanka Rupee Exchange Rate