இந்த அரசாங்கத்திற்கு ஒரு சவால் விடுக்கிறோம் -பொதுபல சேனா
நல்லாட்சி அரசாங்கம் கண் தெரியாத யானை போன்று அங்கும் இங்கும் முட்டி மோதிக்கொண்டிருப்பதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. பொது...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_512.html

நல்லாட்சி அரசாங்கம் கண் தெரியாத யானை போன்று அங்கும் இங்கும் முட்டி மோதிக்கொண்டிருப்பதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் அனைவரும் பேசுவது தேசிய அரசாங்கம் குறித்து. ஏதோ காட்டுக்குள் வாழும் குருட்டு யானை போன்று அங்கும் இங்கும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
இன வாதம் என்றால் என்ன? இனவாதம் குறித்து விளக்கம் தருமாறு நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஒரு சவால் விடுக்கிறோம்.
தேசியவாதம் குறித்து பேசுபவர்களே இனவாத முகாம்களில் தள்ளி புதிய பயணத்தை ஆரம்பிக்க முயற்சிக்கிறார் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate