குருவாயூர் ஆலயத்தில் 8 இலட்சம் பெறுமதியான சந்தனக் கட்டைகளை தட்சனை வழங்கிய ரணில்
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண...

http://kandyskynews.blogspot.com/2015/04/8.html

இன்று காலை இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தை தனது மனைவியுடன் சென்றடைந்த அவர், அங்கிருந்து நேரடியாக குருவாயூர் ஆலயத்திற்கு சென்றார்.
அங்கு அவர் பூஜையில் கலந்து கொண்டு தனது எடைக்கு ஏற்ப 77 கிலோ சந்தனக் கட்டைகளை தட்சனையாக கொடுத்து வழிபட்டார். இதன் பெறுமதி எட்டேமுக்கால் இலட்சம் ஆகும்.
பிரதமர் ரணிலுடன் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் சென்றிருநந்தார். அவர்களுக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மீனவர்கள் குறித்து ரணில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களால், அவருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடிக்கலாம் என்று மத்திய, மாநிலப் புலனாய்வுப் பிரிவுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இதனிடையே, குருவாயூரில் வழிபாடுகளை முடித்தபின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரணில், தான் இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ சார்பானவன் அல்ல என்றும், இலங்கையின் நலன்களை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு பிரதமராகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.