கட்சி தலைவர்களது விசேட கூட்டம் இன்று
கட்சி தலைவர்களது விசேட கூட்டம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ இதனை தெரிவித்தார். நிதியம...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_568.html

கட்சி தலைவர்களது விசேட கூட்டம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ இதனை தெரிவித்தார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தினம் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பு தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் இந்த விசேட கலந்துரையாடலில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால பயணம் தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.