மயூரனின் மேல் முறையீடு தோல்வி: மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும்!
இந்தோனேஷியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஈழத்தமிழர் உட்பட அவுஸ்திரேலியரின் மேன்முறையீட்டை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்த...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_35.html

இவர்களுக்கான மரன தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான ஈழத் தமிழரான அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடொடொ அவர்கள், தமக்கு மன்னிப்பு வழங்க மறுத்ததை எதிர்த்து மேன்முறையீடு செய்திருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு அதிபரின் முடிவை கேள்விக்குள்ளாக்குவதற்கு அதிகாரம் கிடையாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
2005 இல் ஆஸ்திரேலியாவுக்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்ட 9 பேர் கொண்ட குழுவில் இவர்கள் இருவரும் அடங்குகிறார்கள்.
அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் ஒரு பிரச்சார போராட்டம் நடக்கிறது. ஆனால், இவர்கள் இருவரும் மரண தண்டனைக்கான ஏற்பாடுகளுக்காக ஏற்கனவே இந்தோனேசிய தீவு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார்கள்.


Sri Lanka Rupee Exchange Rate