விமான விபத்தில் பலியான புதுமண தம்பதி: சோகத்தில் முடிந்த பயணம்

பிரித்தானியாவை சேர்ந்த புதுமண தம்பதியினர் விமான விபத்தில் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த டேவிட்-மார்கரெட்(David-Ma...



பிரித்தானியாவை சேர்ந்த புதுமண தம்பதியினர் விமான விபத்தில் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த டேவிட்-மார்கரெட்(David-Margaret) என்ற தம்பதியினர், கடந்த யூலை மாதம் திருமணம் செய்து கொண்டு டுண்டீ(Dundee) நகரில் வசித்து வந்துள்ளனர்.

ஈஸ்டர்(Easter) தினத்தில் டேவிட்டின் பெற்றோர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த இவர்கள், நேற்று முன் தினம் தங்களுக்கு சொந்தமான பிப்பர் செரோக்கி(Piper Cherokee) என்ற சிறுரக விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் விமானம் கிளம்பிய சில மணி நேரங்களில், அது ரேடார்(Radar) சிக்னலில் இருந்து காணாமல் போனது.

இதன்பின் Glen Kinglass என்ற நகரில் விமானம் காணாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, மருத்துவ ஹெலிகொப்டருடன் சென்ற மீட்பு குழுவினர் நீண்ட நேரத்திற்கு பிறகு Beinn Lus மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர்.

அங்கு உடல் சிதறி பலியாகியிருந்த புதுமண தம்பதியினரின் உடல்களை மீட்ட பொலிசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்து குறித்து முன்னாள் அதிகாரியான Iain MacKinnon கூறுகையில், விமான விபத்திற்கான முழுமையான காரணம் தெரியாமல் இருந்தாலும், அந்த சிறுரக விமானம் அளவுக்கு அதிகமான வேகத்தில் பறந்துள்ளதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறியுள்ளார்.




Related

மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்

பூமி மெதுவாக சுற்றுவதால் இன்று முதல் 1 வினாடி அதிகமாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. சூரியனை, பூமி ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ...

துருக்கியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான பேரணியில் வன்முறை: கண்ணீர்புகை மற்றும் தண்ணீரை கொண்டு விரட்டியடித்த பொலிஸ் (வீடியோ இணைப்பு)

துருக்கியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைகள் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் விரட்டியடித்தனர். துருக்கியில் கடந்த சில வருடங்களாக ஓ...

சுற்றுலா பயணிகளின் இதயமற்ற செயல்: தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்துகொண்ட அவலம்

டுனிசியா கடற்கரையில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த வெள்ளியன்று டுனிசியா கடற்கரையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 38 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டு...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item