தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்?

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய தேர்தல் முறைமைக்கான 20ம் திருத்...


தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய தேர்தல் முறைமைக்கான 20ம் திருத்தச்சட்ட உத்தேச பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காது, அதற்கு பதிலாக புதிய தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தற்போது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள குறைந்த பட்சம் ஐந்து வாரங்கள் தேவைப்படும்.
எனவே, சட்ட மூலம் ஒன்றாக நாடாளுமன்றில் இதனை சமர்ப்பிக்காது உத்தேச யோசனைத் திட்டமாக நாடாளுமன்றில் தேர்தல் முறைமை மாற்றம் குறித்து விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20ம் திருத்தச் சட்டத்திற்கு அரசாங்கத்தைப் போன்றே எதிர்க்கட்சிகளின் சில கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் 20ம் திருத்தச் சட்ட யோசனையை ஒத்தி வைக்குமாறு கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் தேர்தல் முறைமை மாற்றம் குறித்து விவாதம் நடாத்த தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இன்று சபாநாயகர் சமால் ராஜபக்ச தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
நாளை அவை ஒத்திவைப்பு அமர்வின் போது தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிடவுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சுப் பதவிகளுக்கு அதிகாரமுண்டு: தேர்தல்கள் ஆணையாளர்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளுக்கு அதிகாரம் உண்டு என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக...

சந்திரிக்கா – ரணில் ஆகியோருக்கிடையில் இன்று விசேட சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிக்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலு...

கிணற்றில் வீழ்ந்த இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி!

மின்னேரியா பகுதியில் இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. மின்னேரியா ரொட்டவெவ பகுதியிலுள்ள நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒன்றில் கடைசி குழந்தையே கிணற்றில் வீழ்ந்து உய...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item