சந்திரிக்கா – ரணில் ஆகியோருக்கிடையில் இன்று விசேட சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிக்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. தற...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_8.html

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிக்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்து போட்டியிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
கொழும்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தரப்பு போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த அவசர சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க பொதுவான கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டதனைப் போன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுக் கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Sri Lanka Rupee Exchange Rate