நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சுப் பதவிகளுக்கு அதிகாரமுண்டு: தேர்தல்கள் ஆணையாளர்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளுக்கு அதிகாரம் உண்டு என தேர்தல் ...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_61.html

இதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அமைச்சரவை அமைச்சர்களுக்கு மட்டுமே அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், புதிய சட்டங்களின் அடிப்படையில் பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கும் அதிகாரம் உண்டு.
இதன்படி, பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சரவை அமைச்சர் பதவிகள் அதிகாரமிழந்து விட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளுக்கு அதிகாரம் உண்டு என அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate