பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட சரத் பொன்சேகாவுடன் ஐ.தே.க பேச்சு!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது. இதன்ப...


இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம,சரத் பொன்சேகாவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஏற்கனவே தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று சரத் பொன்சேகாவின் கட்சி தீர்மானித்துள்ளது.
எனினும் ஊழல் மிக்க மஹிந்த ராஜபக்சவினால் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை ஏற்பட்டால், ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடப்போவதாக சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.