நீதியரசர் ஆப்ரூ கைது செய்யப்படுவாரா?
தமது வீட்டில் பணிசெய்த பெண்ணை கைத்துப்பாக்கியின் மூலம் அச்சுறுத்தி தாக்கினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் ச...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_84.html
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளனர்
இதனைடுத்து கட்டளைக்கு அமைய நடவடிக்கைகள் அமையவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நீதியரசரிடம் வாக்குமூலத்தை பொலிஸார் கோரியபோதும் அதற்கு அவர் இணங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த விடயத்தை பொலிஸ் மா அதிபர், குற்றவியல் பொலிஸ் திணைக்களத்திடம் கையளித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்போது சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரின் சாட்சியத்தின்படி நீதியரசர் பல சந்தர்ப்பங்களில் தம்மை தாக்கியதாகவும் கைதியை போல தடுத்து வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நீதியரசர் ஆப்ரூ பதவி விலகவேண்டும் என்று சட்டத்தரணிகள் கூட்டு கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே நீதியரசர் ஆப்ரூ, இந்திய விமான நிலையம் ஒன்றில் வைத்து மற்றுமொரு நீதியரசர் மீது போத்தலை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் சட்டத்தரணிகளின் கூட்டு சுட்டிக்காட்டியுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate