இறுதிக்கட்ட போரில் ஈடுபட்ட மஹிந்தவும் சோனியாவும் போர்க்குற்றவாளிகள்! ரணில் அதிரடி

தமிழினத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின் போது முழுமையான பங்களிப்பை இந்தியா வழங்கியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவ...

தமிழினத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின் போது முழுமையான பங்களிப்பை இந்தியா வழங்கியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் உதவியின்றி இறுதிக்கட்ட போரினை மஹிந்த ராஜபக்ஷவினால் வெற்றி பெற்றிருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 

 

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது, இந்த விடயத்தினை ரணில் குறிப்பிட்டுள்ளார். 

 

சிறிலங்காவில் கடந்த 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப்புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது. 

 

இந்திய உதவியைப் பெறுவதற்கு சிறிலங்காவின் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராஜபக்ஷ அறிவித்தார். ஆனால், அதை அவர் நிறைவேற்றவில்லை. 

 

போரில் உதவியதை இந்திய அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறுக்கலாம். ஒருவேளை இந்திய அரசியல்வாதிகளுக்கு அம்னீசியா ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியா உதவியது என்பதே உண்மை. 

 

இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவும், 1970 காலகட்டத்தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சி.விக்னேஸ்வரன், பொறுப்பற்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். 

 

அவரது தீர்மானத்தின்படி விசாரணை செய்தால் சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு சிறிலங்காவுக்கு அனுப்பபட்ட இந்திய அமைதிப் படையும் காரணமாகும். எனவே படுகொலைகளுக்கு சிறிலங்காவை மட்டும் காரணம் கூறுவது சரியாகாது. விசாரணை அனைத்து தரப்பினரும் மீது நடத்தப்பட வேண்டும் என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, இந்தியாவில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

வலப்பனையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வலப்பனை, லிஹினியாகல பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.வயலுக்கு காவல் இருந்த ஒருவரே இன்று (19) அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார்...

ஜனாதிபதித் தேர்தலின் போது 600 மில்லியன் ரூபா செலவில் சில் புடவை விநியோகம்: விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இடம்பெற்ற சில் புடவை விநியோகம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த நடவடிக்கைகளில் இணைப்பாளராக செயற்பட்டதாகக் கூறப்படும் வட்டி...

தெல்தெனியவில் கைவிடப்பட்டிருந்த நிலையில் சிசு மீட்பு

தெல்தெனிய, அம்பக்கோட்டே பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் புதிதாக பிறந்த சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பக்கோட்டே விஹாரைக்கு அருகில் இந்த சிசு கைவிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item