ஜனாதிபதித் தேர்தலின் போது 600 மில்லியன் ரூபா செலவில் சில் புடவை விநியோகம்: விசாரணைகள் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இடம்பெற்ற சில் புடவை விநியோகம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந...


இந்த நடவடிக்கைகளில் இணைப்பாளராக செயற்பட்டதாகக் கூறப்படும் வட்டினாபஹ சோமானந்த தேரர், வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக பொலிஸ் நிதிமோசடிப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
சில் புடவைகள் விநியோகத்திற்காக 600 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரகடனம் வெளியான பின்னர், தொலைத்தொடர்பாடல்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா செலவில் சில் புடவைகளை கொள்வனவு செய்து விநியோகித்தமை தொடர்பில் நிதிமோசடி விசாரணைப் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
முறைப்பாடு குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு வட்டினாபஹ சோமானந்த தேரர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.