கடத்தப்பட்ட பள்ளி சிறுமிகளின் கதி என்ன? ஓராண்டு காலமாய் நீடிக்கும் மர்மம்
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 276 பள்ளி சிறுமிகளின் நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. நைஜீரியாவின்...


நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிபோக்(Chibok) என்ற ஊரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு ஏப்ரல் 14ம் திகதி பள்ளி சிறுமிகள் தேர்வு எழுத சென்றிருந்தனர்.
அப்போது பள்ளியினுள் திடீரென நுழைந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் 276 சிறுமிகளை கடத்தி சென்றனர்.
இதன்பின் அவர்களுக்குத் திருமணமாகி விட்டது என்றும் அவர்கள் தங்களது கணவன்மார்களுடன் புகுந்த வீட்டில் சந்தோஷமாக உள்ளனர் எனவும் போகோ ஹராம் தலைவர் அபூபெக்கர்(Abubaker) வீடியோவில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தீவிரவாதிகளிடமிருந்து தப்பிய 57 சிறுமிகள் நன்கு படித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள சிறுமிகள், எங்கு இருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன