ஞானசாரவுக்கு வெளி நாட்டிலுள்ள புலிகளுடன் தொடர்பு: ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார் ராஜித சேனாரத்ன (Audio)
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் புலிகள் அமைப்பின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பிற்கா...
http://kandyskynews.blogspot.com/2015/01/audio_14.html
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் புலிகள் அமைப்பின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பிற்கான அனைத்து செலவுகளையும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பொறுப்பேற்றிருந்தார்.இவ்வாறு தெரிவித்தார் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன.
நெத்.FM வானொலியில் நேற்று இரவு ஒலிபரப்பான நெத்.FM அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவிக்கையில் ஞானசார புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் சந்தித்த புகைப்படங்கள் மற்றும் அவர்களுடைய பெயர் விபரங்கள் உள்ளன.தொலை பேசியூடாக ஹிரம தெவிந்த தேரர் கேட்ட கேள்விகளுக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் முழு விபரம் இதோ...
அமைச்சர் ராஜித சேனாரத்ன:நான் உங்களிடம் கேட்கின்றேன் கலபொட அத்தே ஞானசார தேரர் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் எங்கே இருந்தார்? UNPயுடன் தானே இருந்தார்?
இவர் UNPக்கு சென்று ரவி கருணாநாயக்கவை சந்தித்த பின்னர் அவர் தான் இதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்பாடு செய்திருந்தார்.அதற்கு முன்னர் முல்லைத்தீவு சென்றது யாருடன் என்று நான் கேட்கின்றேன்? அதற்கு பின்னர் ஞானசார தேரர் என்னை சந்திக்கவில்லையா? என்று கேளுங்கள்? என்னை சந்தித்து என்ன சொன்னார் என்று கேளுங்கள்?
தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை சந்திக்க நோர்வே சென்று வந்த பின்னர் என்னை சந்திக்கவில்லையா என்று கேளுங்கள்?
நோர்வே சென்று வந்த பின்னர் என்னை சந்தித்து சொன்னார் அமைச்சரே பழைய சம்பவங்களை மறுந்து விடுவோம்.அமைச்சரே நான் இப்போது உங்களுடைய கருத்தியலுடன் ஒன்றாக இருக்கின்றேன்.
நாங்கள் இருவரும் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பொதுவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவோம் என்றார். கலந்துரையாடல் முடிந்து ஒரு மாதத்திற்கு பின்பு தான் முஸ்லிம் களுக்கு எதிரான விரோதங்கள் ஆரம்பமாகியது.இன்று கூட இவர் தமிழர் பிரச்சினை பற்றியும் தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள்,புலிகள் இயக்க தலைவர்கள் பற்றியும் எதுவும் கதைப்பதில்லையே.
ஞானசார தேரர் எப்படி புலித்தலைவர்களை சந்தித்தார் என்று இப்பொழுது அறிந்திருப்பீர்கள் என நான் நினைக்கிறேன்.
ஹிரம தெவிந்த தேரர்: புலித்தலைவர்களுடன் ஞானசார தேரருக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்று எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன: ஞானசார தேரர் புலித்தலைவர்களை சந்தித்த புகைப்படங்களை நான் உங்களிடம் காண்பித்தால் நீங்கள் என்ன பதில் தருவீர்கள்? நோர்வே சென்று எரிக் சொல்ஹெய்ம் அவர்களை சந்திக்கவில்லையா? புலித்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களுடன் உணவு,தேநீர் அருந்தி அவர்களுடன் புகைப்படங்களும் எடுக்கவில்லையா? அந்த புகைப்படங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன.
[youtube https://www.youtube.com/watch?v=MFEilObAjP8]
[youtube https://www.youtube.com/watch?v=MFEilObAjP8]


Sri Lanka Rupee Exchange Rate