உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது. மெல்பர்னில் இன்று ...

Stats-India-vs-South-Africa-Highest-team-totals-in-ODIs-480x400
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.
மெல்பர்னில் இன்று நடந்த பி-பிரிவு ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இந்திய அணி 307 ஓட்டங்களை குவித்திருந்தது.
தென்னாப்பிரிக்க அணி 40.2 ஓவர்கள் முடிவில் 177 ஓட்டங்கள் மட்டுமே குவித்திருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.
இந்திய அணியில் ஷிக்கார் தவான் ஆபாரமாக ஆடி 137 ஓட்டங்களையும் அஜின்க்யா ரஹானே 79 ஓட்டங்களையும் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
விராத் கோலி 46 ஓட்டங்களையும் மகேந்திர சிங் தோனி 18 ஓட்டங்களையும் எடுத்திருந்தினர்.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸிஸ் 55 ஓட்டங்களைக் குவித்திருந்தார். டி வில்லியர்ஸ் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ஓவர்களில் 41 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
மொஹமட் ஷமி மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை 177 ஓட்டங்களுக்குள் சுருட்டினர்.
நடப்பு சாம்பியனான இந்தியா இம்முறை உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபற்றிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
பாகிஸ்தானுடனான முதல் போட்டியை 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.


இதன்படி, பி-பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முன்னணியில் உள்ளது.

Related

விளையாட்டு 1418293393181448335

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item