நான் தோல்வியடைந்தது ஏன்? – மகிந்த ராஜபக்ச விளக்கம்
நாட்டில் முப்பது வருடங்கள் நிலவிய கொடிய யுத்தத்தை முடித்து, நாட்டை ஐக்கியப்படுத்தி, இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தியதால் தான் எ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_888.html
நாட்டில் முப்பது வருடங்கள் நிலவிய கொடிய யுத்தத்தை முடித்து, நாட்டை ஐக்கியப்படுத்தி, இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தியதால் தான் எனக்கு எதிராக வடகிழக்கு மக்கள் வாக்களித்து என்னைத் தோற்கடித்தனர்.
வட கிழக்கு மக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை நானே பெற்றுக்கொடுத்தேன் இங்கு வாக்களிக்கும் சூழல் இல்லாதிருந்தால் நானே வெற்றி பெற்றிருப்பேன் என மஹிந்த ராஜபக்ஷ தங்காலையில் தெரிவித்தார்.
தங்காலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்க மாநாட்டில் அவர் உரையாற்றி னார். ஐ. தே. கட்சி அரசாங்கம் 1980ல் சிறிமாவோ பண்டார நாயக்கவின் குடியுரிமையை பறித்தது. பலாத்காரத்தால் மக்களின் உரிமைகளை இல்லாமற் செய்ய இயலாது.
நாட்டில் 58 லட்சம் பேர் எனக்கு வாக்களித்தனர் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சங்கத் தலைவர் கித்சிரி கமகே உட்பட பலர் உரையாற்றினர். நாமல் ராஜபக்ஷ எம்.பி. உட்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



Sri Lanka Rupee Exchange Rate