தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு தடை: ஜனாதிபதி
சுடும் வெய்யிலில் நீண்ட நேரம் காத்திருந்து மாணவர்கள் படும் அவஸ்த்தையைத் தான் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தான் கல...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_5.html
சுடும் வெய்யிலில் நீண்ட நேரம் காத்திருந்து மாணவர்கள் படும் அவஸ்த்தையைத் தான் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு பாடசாலை மாணவர்களை அழைத்து வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.வரவேற்பு எனும் பெயரில் மாணவர்களை வீதியில் சுடும் வெய்யிலில் நிறுத்தி வைப்பது, அணி வகுப்பு நடாத்துவது மாத்திரமல்லாமல் சுதந்திர தின நிகழ்வின் போது இவ்வாறு இடம்பெறுவதையும் நிறுத்தும்படி தாம் பணிப்புரை விடுத்துள்ளதாக வார இறுதியில் இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணலின் போது ஜனாதிபதி தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate