அர்ஜூன மகேந்திரன் குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாட்டை ஐ.தே.க மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!- ரஞ்சித்
மத்திய வங்கியின் ஆளுனர் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென அமைச்சர் ர...


மத்திய வங்கியின் ஆளுனர் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை பதவி விலகுமாறு கோருவது பொருத்தமானது என தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாக ஜனாதிபதி நேற்று முன்தினம் ஆற்றிய விசேட உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தார்.
மத்திய வங்கிய ஆளுனர் விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனவே இது பற்றி நான் அதிகமாக பேசப்போவதில்லை.
ஆறு மாத காலத்திற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களினால் அதிக வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டார்.
நாட்டை மீளவும் பின்னோக்கி நகர்த்த ஜனாதிபதி விரும்பவில்லை.
நல்லாட்சி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை மாற்றி மீளவும் திருடர்கள் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
மக்களின் நாடித் துடிப்பை அறிந்து ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.