ஜனாதிபதியின் கருத்து ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்தை மோசமாக பாதிக்கும்!- வாசுதேவ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மிக மோசமாக பாதிக...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல்
பிரச்சாரத்தை மிக மோசமாக பாதிக்கும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்து பிழையானது.
ஜனாதிபதி இவ்வாறான ஓர் கருத்தை வெளியிடாமல் இருந்திருக்க வேண்டும். அதுவே பொருத்தமானது.
ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் இதனை எதிர்த்திருந்தார்.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தேர்தல் நடவடிக்கைகளை மோசமாக பாதிக்கும் என வாசுதேவ நாணயக்கார சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.