கருணா அம்மான் ஒளித்து வைத்த வாகனங்களில் இரண்டு மீட்பு
கடந்த அரசின் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் அமைச்சுக்குச் சொந்தமான ஐநது வாகனங்கள் காணாமல் போயிருந்த...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_22.html

கொல்லுப்பிட்டி நொரிஸ் வீதி மற்றும் கெப்படிபொல வீதியில் அமைந்திருக்கும் வீடுகளில் இருந்தே இவ்வாகனங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் ஒரு வாகனம் மட்டக்களப்பில் இருப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த அரசிலும் பதவியொன்றைப் பெறுவதற்கு கருணா அம்மான் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் இவரின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் காத்தான்குடி படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவராக கருணா அம்மான் மீது சந்தேகம் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.