மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் ; பாராளுமன்றில் இன்று விஷேட விவாதம்
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பிலான விவாதம் ஒன்று பாராளுமன்றில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவு...


இதேவேளை,தன்னை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியமை சட்டத்துக்கு புறம்பான செயல் என மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். இது அரசியல் அமைப்புக்கு உட்பட்டதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் 43வது பிரதம நீதியரசராக பொறுப்பேற்ற ஷிராணி பண்டாரநாயக்க, 2013ம் ஆண்டு அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசால் குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை அடுத்து மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். எனினும் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு, மொஹான் பீரிஸின் நியமனம் மற்றும் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் ஆகியன சட்டவிரோதமானது என கூறி, மீண்டும் ஷிராணியை பிரதம நீதியரசர் பதவியை தொடர அனுமதித்தது.
இந்தநிலையில் கடந்த புதன்கிழமை பதவியேற்ற அவர் அதற்கு மறுநாள் வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.
இதனை அடுத்து இலங்கையின் 44 வது பிரதம நீதியரசராக கே.ஶ்ரீபவன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மொஹான் பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நான் பணி நீக்கப்பட்டுள்ளேன். நான் இன்னமும் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெறவில்லை, காரியாலயத்திலிருந்து வெளியேறவும் இல்லை. புற அழுத்தங்கள் காரணமாக என்னை பதவியிலிருந்து சட்டவிரோதமான முறையில் நீக்கியுள்ளனர், எனக் குறிப்பிட்டுள்ளார்.