சீனாவைத் தாக்கிய 6.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் 3 பேர் பலி
சீனாவின் ஜின்ஷியாங் மாகாணத்தின் குவாகவுண்டி அருகே காலை 9 மணியளவில் 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளதாக அமெர...
http://kandyskynews.blogspot.com/2015/07/64-3.html
சீனாவின் ஜின்ஷியாங் மாகாணத்தின் குவாகவுண்டி அருகே காலை 9 மணியளவில் 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.
விவசாயம் அதிகம் நடைபெறும் இப்பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலநடுக்கத்தால் 50 பேர் காயம் அடைந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கானவர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆனால் பொதுமக்கள் விவகாரத்துக்கான சீன அமைச்சு விடுத்த அறிக்கையில் குறைந்த பட்சம் 3000 வீடுகளாவது இடிந்து வீழ்ந்து அல்லது மோசமாக சேதம் அடைந்திருப்பதாகவும் அவ்விடத்துக்கு 1000 தற்காலிகக் கூடாரங்கள் அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக சீனப் பூகம்ப சேதங்களைக் கண்காணிப்பதற்கென ஆளில்லா டிரோன் விமானங்கள் குறித்த இடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும் எல்லைகளுக்கு அருகே அமைந்துள்ள ஜின்ஷியாங் மாநிலம் சீன அரசுக்கும் பூர்வீக இஸ்லாமியப் போராளிகளுக்கும் இடையே அரசியல் பதற்றம் நிலவி வரும் பகுதி ஆகும். மேலும் சீனா பூகோள ரீதியாக நிலநடுக்கங்களால் அதிகளவு தாக்கப் பட்டு வரும் நாடுகளில் ஒன்றாகும். கடைசியாக 2008 இல் தென்மேற்கு மாநிலமான சிச்சுவானைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கத்தில் 70 000 பொது மக்கள் கொல்லப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate