மஹிந்த உள்வாங்கப்பட்டமை எனக்கு அறிவிக்கப்படவில்லை! முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்ன வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்ப...


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்ன வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பது தொடர்பில் தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என்றும், இது குறித்து தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் செயற்பட்டு வருகின்ற நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவின் பெயர் சுதந்திரக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் தான் அறிந்திருக்கவில்லை என்றும், தனக்கு அறிவிக்கவில்லையென்றும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விவகாரம் தொடர்பில் உண்மை நிலைமைகளை அறிந்து கொண்டதன் பின்னரே எந்தக் கருத்தினையும் வெளியிட முடியும் என்றும் அவர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படுமானால் தானும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டியேற்படும் என சில தினங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related

தலைப்பு செய்தி 4924408267992422634

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item