மஹிந்த இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டி?- இல்லை இல்லை.. மஹிந்த குருநாகலில் போட்டி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தோதலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தோதலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி இதனை தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.

அந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

மிரிஹானவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் அவரைச் சந்தித்து இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுமாறு கோரினேன்.

இந்தக் கோரிக்கையை மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டார்.

நாளை நடைபெறவுள்ள இரத்தினபுரி மாவட்டக் கூட்டத்தில் இது குறித்த யோசனை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளேன் என பவித்ரா வன்னியாரச்சி நேற்று முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் மஹிந்த எந்த மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இதுவரையில் வெளியிடவில்லை.

மஹிந்த குருநாகலில் போட்டியிடுவார்- டி.பி ஏக்கநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டி பி ஏக்கநாயக்க இதனை அறிவித்துள்ளார.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் வேட்புமனு திரும்பப்பெறப்படலாம் என்ற சந்தேகம் தொடர்பில் ஏக்கநாயக்க எதனையும் தெரிவிக்கவில்லை.





Related

தலைப்பு செய்தி 9016993941656377792

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item