ழக்கு மாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இன்று முக்கிய சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர். ஜனாதிபதியின் அவசர அழைப...


இதேவேளை நேற்று புதன்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களான இரா. சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாணசபையின்கூட்டமைப்பு உறுப்பினர்கள் சமகால விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.
கிழக்கு மாகாண சபையில் இன்று எழுந்துள்ள அசாதாரண நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வதென்பது தொடர்பாக கருத்துக்கள் அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டன. முதலமைச்சர் மற்றும் மாகாண ஆட்சி அமைப்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டன. முஸ்லிம் காங்கிரசுடனான பலகட்டச் சந்திப்புகளையடுத்து கிடைத்த ஏமாற்றத்தின் விளைவாக இச்சந்திப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.