ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆயுதத்துடன் ஒருவர் சென்றமை தொடர்பில் மேலும் இருவர் கைது
அங்குனகொலபெலஸ்ஸயில் ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டமொன்றுக்கு துப்பாகியுடன் இராணுவக் கோப்ரல் சென்ற சம்பவம் தொட்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_90.html
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடமையை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில் குறித்த இருவரும் ஏற்கனவே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக துப்பாக்கியொன்றுடன் குறித்த கூட்டத்திற்கு சென்றதாக கூறப்படும் இராணுவக் கோப்ரல் அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.